Friday, February 20, 2009
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -[2] -எந்தன்
சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] -எந்தன்
உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -[2] -எந்தன்
Saturday, February 14, 2009
அய்யய்யா நான் ஒரு மாப்பாவி
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அய்யய்யா நான் ஒரு மாப்பாவி -எனை
ஆண்டு நடத்துமே தேவா நீர் -[2]
அய்யய்யா இது தருணமையா எந்தன்
மீதில் இறங்க சமயமைய்யா
அய்யய்யா இப்போதென் மேலே இறங்குவதும்
அவசியம் வாரவேணும் தேவா நீர் -[2] (அய்ய)
பாதாள லோகத்தின் வாழ்வை எல்லாம் -தினம்
அருவருத்து நான் தள்ளுதற்க்கு
மாசனுகா சுத்த மனம் தருவீர் நீரே
வல்லவராகிய தேவா நீர் -[2] (அய்ய)
பக்தியின் பாதையை விலகாமல் -கெட்ட
பாவத்தில் ஆசைகள் வைய்யாமல்
சத்திய வேதப் படி நடக்க என்னை
தாங்கி நடத்திடும் தேவா நீர் -[2] (அய்ய)
Subscribe to:
Posts (Atom)