Friday, December 26, 2008

கிருபை தேவ கிருபை



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கிருபை தேவ கிருபை
அது என்றும் உள்ளது

இயேசுவின் தூய கிருபை
அது நம் மேல் உள்ளது [2]

நித்தியமானது சத்தியமானது - கிருபை

தூய்மையில் தவறிய வேளை
தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு
தாங்கியே அணைத்திட்டார் [2]

உரிமையாய் நம்மையும்
பரிவுடன் நடத்திட்டார் [2] - கிருபை

ஒளியென உலகில் வந்தார்
ஒளியென விளங்கிட அழைத்தார்
ஒளிதரும் தீபங்களாய்
ஒளிர்ந்திட ஜீவிதார் [2]

நீதியின் சூரியனாய்
கரிசனை ஏந்திட்டார் [2]- கிருபை

தந்தானைத் துதிப்போமே திருச்சபையோரே



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தந்தானைத் துதிப்போமே திருச்
சபையோரே கவி பாடிப்பாடி.

விந்தையாய் நமக்கனந்தனந்த மான
விள்ளற்கரிய தோர் நன்மை மிக மிக

ஓய்யாரத்துச் சீயோனே நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக் குனின்கையைக் கூப்பித்துதி
செய்குவையே மகிழ்கொள்ளுவையே நாமும்

காண்ணாரக் களித்தாயே -நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னு முன்மெற் சோனா மாரிபோற்பெய்துமே

சுத்தாங்கத்து நற்சபையே உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிது
சத்துக் குலைந்துனைச் சத்தி யாக்கத்தமின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்து உயிர்வரம்

தூரந்திரிந்த சீயோனே உனை
தூக்கி எடுத்துக் கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி யலங்கரித்து உன்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை

சிங்காரக் கன்னிமாரே உம்
அலங்கார கும்மியடித்துப் படித்து
மங்காத உன் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப்பணி ந்திடும்

எனக்கொரு ஆசையுண்டு என் இயேசுவை




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எனக்கொரு ஆசையுண்டு
என் இயேசுவை காணவேண்டும்
எனக்கொரு ஆவலுண்டு
நான் அவரோடு பேசவேண்டும் [2]

வானகமே வையகமே
எனது ஆசை நிறைவேறுமா [2]
எனது ஆசை நிறைவேறுமா - [எனக்கொரு]

மலையும் காடும் சோலையும்
அலை மோதும் கடலும் தேடினேன் [2]
காணேன் அவரை கதறி அழுதேன்
கர்த்தரே வாரும் வாரும் என்பேன் [2]- [ வானகமே ]

கரம் ஒன்று என்னை தொட்டது
கண்ணீரை மெதுவாய் துடைத்தது [2]
வேதம் தந்தேன் தினமும் அதிலே
என்னைபார் என மொழிந்தது [2]- [ வானகமே ]

தினமும் வேதத்தில் காண்கிறேன்
தேவாதி தேவனைத் துதிக்கிறேன் [2]
ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்
ஜீவதேவனை வாழ்த்துகிறேன் [2]
வானகமே வையகமே
எனது ஆசை நிறைவேறிற்றே [2]
எனது ஆசை நிறைவேறிற்றே- [ எனக்கொரு ]

அன்பென்ற மழையிலே அகிலங்கள்



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ் மைந்தன் தோன்றினானே......
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே.........
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.... அதிரூபன் தோன்றினானே..
போர்க்கொண்ட பூமியில் தூக்காடு காணவே....
புகழ் மைந்தன் தோன்றினானே.....

[1]

கல்வாரி மலையிலே கல்லொன்றி பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே....
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாக தோன்றினானே......
இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவே
நிறைபாலன் தோன்றினானே.....
முட்க்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவி ராஜன் தோன்றினானே.....

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே.......
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே........[2]

தேவனே நான் உமது அண்டையில்



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தேவனே நான் உமது அண்டையில்
இன்னும் நெருங்கி
சேர்வதே என் ஆவல் பூமியில் [2]

மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலால் உன் அண்டை சேர்வேன் [தேவனே]

யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுதுபட்டு இராவினிருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கி உம்மை கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா - [தேவனே]

பரத்துக்கேறும் படிகள்போலவே என்பாதை தோன்ற
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம்
உமது அண்டை அருமையாய் என்னை அழைத்து
அன்பின் பூரணமாக செய்யும் [தேவனே]

Thursday, December 18, 2008

christmas song





!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எனக்கொத்தாசை வரும் Enakkothasai varum




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏர் எடுப்பேன்.[2]

வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே [2]
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்களை ஏர் எடுப்பேன் [2][எனக்கொத்தாசை]

மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலை மாறி புவி அகன்றிடினும் [2]
மாறிடுமோ அவர் கிருபையின் ஆழம்
ஆறுதல் எனக்கவரே [2] [எனக்கொத்தாசை]

என் காலை தள்ளாடஒட்டார்
என்னை காக்கும் தேவன் உறங்கார் [2]
இஸ்ரவேலை காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே [2] [எனக்கொத்தாசை]

எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவை காக்கும் என் தேவன் [2]
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் [2] [எனக்கொத்தாசை]

Sunday, December 14, 2008

தண்ணீர் இல்லா இடத்தில்




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தண்ணீர் இல்லா இடத்தில்
ஊற்று ஒன்று கண்டேன் [2]
அன்பே இல்லா இடத்தில்
அன்பான வார்த்தைக் கேட்டேன் [2] (தண்ணீர்)

புண்பட்ட மனதுக் என்றும்
ஆறுதல் நீரே இயேசுவே இயேசுவே
எந்தன் இனிய தெய்வம் என்றும் நீர் தானே
புண்பட்ட மனதுக் என்றும் ஆறுதல் நீரே
ஆற்றும் உம் மகிமை அன்பான வார்த்தை
கேட்டு மகிழ்வேனே (தண்ணீர்)

அம்மாவை கண்டதில்லை
ஏங்கினேன் நானே இயேசுவே இயேசுவே
உந்தன் அரவணைப்பில் கண்டேன் அன்பெல்லாம்
அம்மாவை கண்டதில்லை ஏங்கினேன் நானே
கண்டேன் அரவணைப்பில் அம்மாவின் அன்பை
உறவெல்லாம் இயேசுவே [தண்ணீர்]

Friday, December 12, 2008

மான்கள் நீரோடை வாஞ்சித்து mankal nirotai vanchiththu



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே

தஞ்சனும் நீர் அடைக்கம் நீர் கோட்டையும் நீர்
என்றும் காப்பீர் [2]

தேவன் மேல் ஆத்துமமே தாகமாய் இருக்கிறது [2]
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே [2] (தஞ்சனும்)

யோர்தான் தேசத்திலும் ஏனோன் மலைகளிலும் [2]
சிறு மலைகளில் இருந்தும் உம்மை
நிதமும் நினைத்திடுவேன் [2] (தஞ்சனும்)

ஆத்துமா கலங்குவதேன் தேவனே காத்திருப்பார் [2]
அவரே என் இரட்சிப்பு தினமும்
அவரைத் துதித்திடுவாய் [2] (தஞ்சனும்)

மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே

***************************************************************

mankal nirotai vanchiththu kavaanaththal thevaane
yenthaan aththuma ummaiye vanchiththe katharrume

thaanchaanum nir ataikkam nir kottaiyum nir
yenrrum kappir [2]

thevaan mel aththumame thakamay irukkirrathu [2]
thevaanin channithiyil ninrrit
aththuma vanchikkuthe [2] (thaanchaanum)

yorthan thechaththilum enon malaikalilum [2]
chirru malaikalil irunthum ummai
nithamum ninaiththituven [2] (thaanchaanum)

aththuma kalaankuvathen thevaane kaththiruppar [2]
avare yen iratchippu thinamum
avaraith thuthiththituvay [2] (thaanchaanum)

mankal nirotai vanchiththu kavaanaththal thevaane
yenthaan aththuma ummaiye vanchiththe katharrume

Wednesday, December 10, 2008

கல்வாரி சிலுவை நாதா kalvaari siluvai naathaa




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கல்வாரி சிலுவை நாதா
கார்இருள் நீக்கும் தேவா [2]

பல்வினை பலனாம் பாவம்
புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ]

மண்ணுயிர் மீட்கும் அன்பா
தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2]
மன்பதர் மாந்தர் முன்னால்

தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ]

தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2]
சேய் உள்ளம் தந்தாய் அருளாய்

வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ]


***************************************************************

kalvari chiluvai natha
karirul nikkum theva [2]

palvinai palaanam pavam
purinthavar yemaikkan parum [2] [ kalvari ]

mannuyir mitkum anpa
than uyir mayththay anpe [2]
maanpathar manthar munnal

tharaniyai iluththay ninpal [2][ kalvari ]

thuyavaan ninnai kantor
thee ullam thelinthe nirrpan [2]
chey ullam thanthay arulay

vaai ullam thanthen pukalay [2] [ kalvari ]