Friday, June 20, 2008

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்



================================================

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 )


பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா....
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......)


ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பத்தாரையும் ஐயம் தீர உணர்ந்தார்.
இயற்க்கை உலகமே தூய்மையானது என
இயேசு நினைத்தாரே....
எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...)


ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே ( 2 )
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே....
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே...( 2 )
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே......
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -( கேளுங்கள்..(2))


தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 )
நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உளுங்கள் என்று
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்.....

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார்
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்..
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே......

துன்பத்தை அகற் இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே ( 2 )
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தனே
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே
ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே ( 2 )
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே (கேளுங்கள்.......)

No comments: