Friday, June 20, 2008
உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கிறவன்
================================================
உன்னதமானவரின் உயர் மறைவினில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே (2)
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)
தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணும் அவர்
அவர் சத்திய பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே (2)
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)
இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் (2)
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)
ஆபத்திலும் அவரை நான் நோக்கி கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் (2)
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தாம் சிறகுகளால் மூடுவார் (2)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment