Saturday, October 17, 2009
உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இறைவா.....இறைவா....இறைவா....இறைவா......இறைவா....
ஆ....ஆ...ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ.....ஆ.....ஆ...ஆ......
உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா.....
உமதன்பு படைப்புகளை நேசிக்கின்றேன் இறைவா..
உம கரத்தின் வல்லமை உணர்கின்றேன் இறைவா..
உம் முகத்தை படைப்பினில் காணுகின்றேன் இறைவா....
இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)
1
வானம் பூமி கடல் யாவும் நேசிக்கின்றேன் இறைவா..
கானம் பாடும் பறவைகளை நேசிக்கின்றேன் இறைவா...
அதிகாலை பனிப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா...
அழகு மலர்கள் புல்வெளிகள் நேசிக்கின்றேன் இறைவா....
உன் புகழ் உரைக்கின்றேன் உதயம் ஆகிறாய்..(2)
உன்பதம் பணிகின்றேன் ஒளிவிளக்காகிறாய்......
அழகிய என் உலகை அனைத்து காத்திடவே
அன்பால் நிறைத்திடவே ஆற்றல் தருகின்றாய்....
இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)
2
கதிரவனை முழுநிலவை நேசிக்கின்றேன் இறைவா....
தவழும் நதி வீசும் தென்றல் நேசிக்கின்றேன் இறைவா....
நீலவானில் நீந்தும் மேகம் நேசிக்கின்றேன் இறைவா.....
வான்பொழியும் மழைப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா....
இயற்கையில் சங்கமித்து உன்னைக் காணுகின்றேன்...(2)
இறை உன் படைப்போடு ஒன்றாய்ப் பாடுவேன்......
எல்லா உயிர்களுமே எங்கும் வாழ்ந்திடனும்.......
எல்லா மாந்தருமே மகிழ்வை கண்டிடணும்.....
இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)
Tuesday, October 13, 2009
என் இதயம் யாருக்கு தெரியும்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
" யார் என்னைத் தேற்றுவார் " (4 ) - என் இதயம்
நெஞ்ஜில் நோவுகள் அதை மிஞ்சும் பாரங்கள் -2
தஞ்சம் இன்றியே நெஞ்சம் ஏங்குதே
நெஞ்சம் ஏங்குதே - என் இதயம்
சிறகு ஒடிந்த பறவை அது வானில் பறக்குமோ -2
உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ
ஒன்று சேருமோ - என் இதயம்
அங்கே தெரியும் வெளிச்சம் அது கலங்கரை தீபமோ -2
இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே
முகத்தின் வெளிச்சமே
என் இதயம் இயேசுவுக்கு தெரியும்
என் வேதனை இயேசுவுக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
" இயேசு என்னைத் தேற்றுவார் " (4 ) - என் இதயம்
Friday, February 20, 2009
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -[2] -எந்தன்
சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
தடை யாவும் அகற்றிடுமே
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2] -எந்தன்
உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேனே -[2] -எந்தன்
Saturday, February 14, 2009
அய்யய்யா நான் ஒரு மாப்பாவி
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அய்யய்யா நான் ஒரு மாப்பாவி -எனை
ஆண்டு நடத்துமே தேவா நீர் -[2]
அய்யய்யா இது தருணமையா எந்தன்
மீதில் இறங்க சமயமைய்யா
அய்யய்யா இப்போதென் மேலே இறங்குவதும்
அவசியம் வாரவேணும் தேவா நீர் -[2] (அய்ய)
பாதாள லோகத்தின் வாழ்வை எல்லாம் -தினம்
அருவருத்து நான் தள்ளுதற்க்கு
மாசனுகா சுத்த மனம் தருவீர் நீரே
வல்லவராகிய தேவா நீர் -[2] (அய்ய)
பக்தியின் பாதையை விலகாமல் -கெட்ட
பாவத்தில் ஆசைகள் வைய்யாமல்
சத்திய வேதப் படி நடக்க என்னை
தாங்கி நடத்திடும் தேவா நீர் -[2] (அய்ய)
Friday, January 2, 2009
உம்மை அப்பாண்ணு கூப்பிடத்தான் ஆச
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உம்மை அப்பாண்ணு கூப்பிடத்தான் ஆச
உம்மை அப்பாண்ணு கூப்பிடவா
உம்மை அம்மாண்ணு கூப்பிடத்தான் ஆச
உம்மை அம்மாண்ணு கூப்பிடவா [2]
அப்பாண்ணு கூப்பிடுவேன்
உம்மை அம்மாண்ணு கூப்பிடுவேன்
உம்மை அப்பாண்ணு கூப்பிடுவேன்
உம்மை அம்மாண்ணு கூப்பிடுவேன் -[உம்மை]
கருவில் என்னை சுமந்தத பார்த்தா
அம்மாண்ணு சொல்லணும்
தோழில் என்னை சுமந்தத பார்த்தா
அப்பாண்ணு சொல்லணும் [2]
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
உம்மை அம்மாண்ணு சொல்லணும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
உம்மை அப்பாண்ணு சொல்லணும் [2]-[உம்மை]
கண்ணீரத் துடச்சதப் பார்த்தா
அம்மாண்ணு சொல்லணும்
என் விண்ணப்பத்தை கேட்டதப்பார்த்தா
அப்பாண்ணு சொல்லணும் -[2]
எண்ணை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
உம்மை அம்மாண்ணு சொல்லணும்
உங்க இரக்கத்த உருக்கத்தப் பார்த்தா
உம்மை அப்பாண்ணு சொல்லணும் [2]-[உம்மை]
Subscribe to:
Posts (Atom)