Tuesday, August 26, 2008

உதவி வரும் கன்மலைநோக்கி Udavi varum kaanmalainokki




உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் [2]

(1)
கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் [2]
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் [2] (உதவி)

(2)
கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்[2]
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் [2] (உதவி)

(3)
கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் [2]
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் [2] (உதவி)

(4)
போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் [2]
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் [2] (உதவி)

Sunday, August 24, 2008

கர்த்தரையே துதிப்பேன்




ALL LINS COMES ON TWO TIMES

கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்

[1]
நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலை கேட்டு விடுதலைக் கொடுத்தார்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[2]
எனக்கு உதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்

[3]
எனது பெலனும் எனது மீட்பும் கீதமும் ஆனார்
நம்பி இருக்கும் கேடையமும் கோட்டையும் ஆனார்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[4]
கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை
கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

[5]
வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்கு செய்தாரே
உயிரோடு இருந்து உலகத்திற்க்கு எடுத்து சொல்லுவேன்
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான் [5]

Sunday, August 10, 2008

எந்தன் நெஞ்சம் எல்லாம் நன்றி




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


எந்தன் நெஞ்சம் எல்லாம்
நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2]

ஆராதனை செய்வோம்
நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்]

நோயின் கொடுமையிலே ஓ.....
மரண படுக்கையிலே ஓ..........
கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து....
கலங்கி தவித்த நேரத்திலே - இனி
பிழைப்பேனோ என்ற நிலமையிலும்
ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே
இயேசைய்யா நீர் எனது மூப்பியனே.. [எந்தன்]

எதுக்கும் உதவாத ஒ........
குப்பை நான் ஐயா ஓ......
அற்பமான என்னையும் தூக்கி
உமக்காய் தெரிந்து கொண்டீரே
எல்லோருமே என்னை வெறுக்கையிலே
உந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்
இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே [எந்தன்]

சிரித்தபோதெல்லோரும் ஓ.....
கூட சிரித்தனரே ஓ.....
அழுதபோது யாரும் இல்லையே
நான் மட்டும் தானே அழுதேன்
என் வாழ்விலும் என் தாழ்விலேயும்
இன்பதுன்பமோ எந்த நிலையிலும்
பிரியாமல் நீர் கூட இருக்கின்றீரே [எந்தன்]

கண்ணீரோடு நன்றியை காணிக்கையாக்குகிறேன் [எந்தன்]

நம்பி வந்தேன் இயேசையா

Tuesday, August 5, 2008

ஆத்துமமே என் முழு உள்ளமே





ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரை தொழுதேத்து
இந்ந நாள் வரை அன்புவைத் ஆதரித்த
உன் ஆண்டவரை தொழுதேத்து [2]

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சற்றுதர்க் அரிய தன்மை உள்ள......[2] (ஆத்துமமே என் )

தலைமுறை தலைமுறை தாங்கும் வினோத
உலகம் முன் தோங்கி ஒழியாத......[2] (ஆத்துமமே என் )

தினம் தினம் உலகில் நீ செய்பலவான
வினை பொறுத்தருளும் மேலான......[2] (ஆத்துமமே என் )

வாதை நோய் துன்பம் மாற்றி ஆனந்த
போதரும் தயை செய்து உயிர் தந்த......[2] (ஆத்துமமே என் )

முற்றுனக் இரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்......[2] (ஆத்துமமே என் )

Friday, August 1, 2008

என் மனம் பாடும் பாடலிது தேவா..




என் மனம் பாடும் பாடலிது தேவா..
என் மனம் பாடும் பாடலிது தேவா..
என்னுள்ளே தீரா தாகமிது நாதா...
நீர் தரும் நேசம் நினைவினில் வாழும்...(2)
நிலையில்லா பனிபோல என் சோகம் மாறும்.....(என் மனம்....)

[1]

நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய்........(2)
கனவெல்லாம் கானல் நீரோ...
நான் கண்ணீரில் வாழும் மீனோ...
உன் திருவடியே என் மனம் சரணம்..
உளமதிலே நீ உன் ஒளி தரனும்....(என் மனம்...)

[2]

வழி மீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன்.....(2)
நான் என்ன வாடும் பூவோ...
இல்லை உன் பாதம் சூடும் பூவோ...
என் மனம் நீ வா... நிம்மதியை தா...
என் முகம் தனிலே... புன்னகையை தா.....(என் மனம்....)