Friday, August 1, 2008

என் மனம் பாடும் பாடலிது தேவா..




என் மனம் பாடும் பாடலிது தேவா..
என் மனம் பாடும் பாடலிது தேவா..
என்னுள்ளே தீரா தாகமிது நாதா...
நீர் தரும் நேசம் நினைவினில் வாழும்...(2)
நிலையில்லா பனிபோல என் சோகம் மாறும்.....(என் மனம்....)

[1]

நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய்........(2)
கனவெல்லாம் கானல் நீரோ...
நான் கண்ணீரில் வாழும் மீனோ...
உன் திருவடியே என் மனம் சரணம்..
உளமதிலே நீ உன் ஒளி தரனும்....(என் மனம்...)

[2]

வழி மீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன்.....(2)
நான் என்ன வாடும் பூவோ...
இல்லை உன் பாதம் சூடும் பூவோ...
என் மனம் நீ வா... நிம்மதியை தா...
என் முகம் தனிலே... புன்னகையை தா.....(என் மனம்....)

No comments: