Sunday, August 10, 2008
எந்தன் நெஞ்சம் எல்லாம் நன்றி
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எந்தன் நெஞ்சம் எல்லாம்
நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2]
ஆராதனை செய்வோம்
நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்]
நோயின் கொடுமையிலே ஓ.....
மரண படுக்கையிலே ஓ..........
கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து....
கலங்கி தவித்த நேரத்திலே - இனி
பிழைப்பேனோ என்ற நிலமையிலும்
ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே
இயேசைய்யா நீர் எனது மூப்பியனே.. [எந்தன்]
எதுக்கும் உதவாத ஒ........
குப்பை நான் ஐயா ஓ......
அற்பமான என்னையும் தூக்கி
உமக்காய் தெரிந்து கொண்டீரே
எல்லோருமே என்னை வெறுக்கையிலே
உந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்
இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே [எந்தன்]
சிரித்தபோதெல்லோரும் ஓ.....
கூட சிரித்தனரே ஓ.....
அழுதபோது யாரும் இல்லையே
நான் மட்டும் தானே அழுதேன்
என் வாழ்விலும் என் தாழ்விலேயும்
இன்பதுன்பமோ எந்த நிலையிலும்
பிரியாமல் நீர் கூட இருக்கின்றீரே [எந்தன்]
கண்ணீரோடு நன்றியை காணிக்கையாக்குகிறேன் [எந்தன்]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment