Friday, December 26, 2008
எனக்கொரு ஆசையுண்டு என் இயேசுவை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எனக்கொரு ஆசையுண்டு
என் இயேசுவை காணவேண்டும்
எனக்கொரு ஆவலுண்டு
நான் அவரோடு பேசவேண்டும் [2]
வானகமே வையகமே
எனது ஆசை நிறைவேறுமா [2]
எனது ஆசை நிறைவேறுமா - [எனக்கொரு]
மலையும் காடும் சோலையும்
அலை மோதும் கடலும் தேடினேன் [2]
காணேன் அவரை கதறி அழுதேன்
கர்த்தரே வாரும் வாரும் என்பேன் [2]- [ வானகமே ]
கரம் ஒன்று என்னை தொட்டது
கண்ணீரை மெதுவாய் துடைத்தது [2]
வேதம் தந்தேன் தினமும் அதிலே
என்னைபார் என மொழிந்தது [2]- [ வானகமே ]
தினமும் வேதத்தில் காண்கிறேன்
தேவாதி தேவனைத் துதிக்கிறேன் [2]
ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்
ஜீவதேவனை வாழ்த்துகிறேன் [2]
வானகமே வையகமே
எனது ஆசை நிறைவேறிற்றே [2]
எனது ஆசை நிறைவேறிற்றே- [ எனக்கொரு ]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment