Thursday, December 18, 2008
எனக்கொத்தாசை வரும் Enakkothasai varum
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏர் எடுப்பேன்.[2]
வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே [2]
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்களை ஏர் எடுப்பேன் [2][எனக்கொத்தாசை]
மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலை மாறி புவி அகன்றிடினும் [2]
மாறிடுமோ அவர் கிருபையின் ஆழம்
ஆறுதல் எனக்கவரே [2] [எனக்கொத்தாசை]
என் காலை தள்ளாடஒட்டார்
என்னை காக்கும் தேவன் உறங்கார் [2]
இஸ்ரவேலை காக்கும் நல் தேவன்
இராப்பகல் உறங்காரே [2] [எனக்கொத்தாசை]
எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவை காக்கும் என் தேவன் [2]
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய் [2] [எனக்கொத்தாசை]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment